அரியலூர் மாவட்டத்திலுள்ள கீழவட்டாங்குறிச்சி என்னும் கிராமத்தில், அரவிந்த் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய படிப்பிற்காக திருமழப்பாடியில் அமைந்துள்ள கனரா வங்கியில் 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
தனது படிப்பை முடித்த நிலையில் கடந்த ஆண்டு அவர் நேர்காணலுக்காக சென்று விட்டு வீடு திரும்பிய போது திருவையாறு பகுதியில் அவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அரவிந்த் உயிரிழந்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவர் இறந்து விட்டதாக சான்றிதழ் வாங்கி கனரா வங்கி மேலாளரிடம் அரவிந்தன் பெற்றோர் ஒப்படைத்து விட்டனர். ஆனால், இறப்பு சான்றிதழ் ஒப்படைக்கப்பட்ட பின்னும் கூட அரவிந்த் வாங்கிய கல்வி கடனுக்கு வசியுடன் சேர்த்து 4 லட்சமாக திருப்பி செலுத்த வேண்டும் என அரியலூர் சார்பியல் நீதிமன்றத்தில் கனரா வங்கியினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதனால், நீதிமன்றம் அரவிந்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதன் காரணமாக, அரவிந்தனின் பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மகனையும் இழந்து கடன் தொல்லைக்கும் ஆளான நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் அரவிந்தனின் பெற்றோர் கதறி அழுகின்றனர்.