இந்திய வம்சாவளி சிறுமி மரணம்: அமெரிக்கருக்கு 100 ஆண்டு சிறை| US Man Jailed For 100 Years Over Indian-Origin Girl’s Death: Report

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: துப்பாக்கிச்சூட்டில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 வயது சிறுமி இறந்த வழக்கில் அமெரிக்காவை சேர்ந்தவருக்கு 100 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் லூசியானாவில் உள்ள ஓட்டல் அறையில் மையா படேல் (5) என்ற சிறுமி விளையாடி கொண்டிருந்தார். கதவு அப்போது குண்டு பாய்ந்ததில் சிறுமி படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதும், மையா படேல் உயிரிழந்தார்.

latest tamil news

இது தொடர்பாக ஜோசப் லீ ஸ்மித் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். வண்டி நிறுத்துமிடத்தில் மற்றொரு நபருடன் ஏற்பட்டதகராறில் ஸ்மித் துப்பாக்கியால் சுட்டதும், ஆனால், அருகில் இருந்த அறையில் விளையாடி கொண்டிருந்த சிறுமி பாய்ந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பான வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜான் டி மோஸ்லே, பரோல் மற்றும் தண்டனை குறைப்பு என எந்த சலுகையும் இல்லாத 60 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை வழங்கினார். மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.