மகாராஷ்டிரா மாநிலம், மும்பை, செம்பூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் மகன் ராஜேஷ் என்பவர், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளார்.
அவரின் அந்த புகார் மனுவில், எனது இன்ஸ்டாகிராம் தோழி லோரன் மூலம் அவரின் சகோதரி ஹசல் ஜேம்ஸ் அறிமுகமானார். அவர் தனக்குத் திருமணம் ஆகவில்லை என்று கூறி என்னை காதலித்து ஏமாற்றி உள்ளார்.
மேலும், அசல் ஜேம்ஸ் ஒரு கட்டத்தில் தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், அவர்கள் கஷ்டப்படுவதாகவும் பேசி, பணம், கார், துணி, அழகு சாதன பொருட்கள் என 20 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பொருட்களை தன்னிடமிருந்து ஹசல் ஜேம்ஸ் ஏமாற்றி வாங்கி உள்ளார்.
தற்போது என்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கும் அவரிடம், நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது, ‘உன்னை தீர்த்து கட்ட இரண்டு லட்சம் ரூபாய் கூலிப்படையினரிடம் கொடுத்தால் போதும்’ என்று கொலை மிரட்டல் விடுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தனது புகார் மனுவில் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் குறித்து விசாரணை செய்த போலீசார், புகார் பேரில் உண்மை இருப்பது தெரிய வந்ததால், இன்ஸ்டால் நாடக காதலி ஹசல் ஜேம்ஸ் மீதும், அவரின் குடும்பத்தார் மீதும் மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமுறைவாக உள்ள ஹசல் ஜேம்ஸை தேடி வருகின்றனர்.