இரவிகுளம் தேசிய பூங்கா ஏப்.,1ல் திறக்க ஏற்பாடு| Iravikulam National Park is scheduled to open on April 1

மூணாறு- —மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்கா வரையாடுகளின் பிரசவ காலத்திற்கு பிறகு ஏப்., 1 ல் திறக்க ஏற்பாடு நடக்கிறது.

இரவிகுளம் தேசிய பூங்காவில் அபூர்வ இன வரையாடுகள் ஏராளம் உள்ளன. அவற்றை காண பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆண்டு தோறும் வரையாடுகளின் பிரசவத்திற்கு பிப்., ஒன்று முதல் மார்ச் 31 வரை பூங்கா மூடப்பட்டு ராஜமலைக்கு பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்படும். அதன்படி இந்தாண்டு பிப்., 1ல் பூங்கா மூடப்பட்டது. நேற்று வரை 102 குட்டிகள் பிறந்ததாக வனத்துறையினர் கணக்கிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஏப்., 1 ல் பூங்காவை திறக்க வனத்துறையின் ஏற்பாடுகளை செய்கின்றனர். வரையாடுகளின் பிரசவத்திற்கு பின் புது பொலிவுடன் பூங்கா திறக்கப்படும். இம்முறை ராஜமலையில் ‘செல்பி பாயின்ட்’ உட்பட பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.