பசல்: சுவிஸ் ஓபன் பாட்மின்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
சுவிட்சர்லாந்தின் பசல் நகரில், சுவிஸ் ஓபன் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி, 21-19, 17-21, 21-17 என மலேசியாவின் ஆங் யேவ் சின், டியோ ஈ யி ஜோடியை வீழ்த்தியது.
பைனலில் இந்திய ஜோடி, சீனாவின் ஜியாங் யு ரென், கியாங் டான் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 21-19 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 24-22 என சற்று போராடி தன்வசப்படுத்தியது. மொத்தம் 54 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-19, 24-22 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டு (2022, தங்கம்), டோக்கியோ உலக சாம்பியன்ஷிப் (2022, வெண்கலம்) போட்டிகளில் பதக்கம் வென்ற சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, ‘வேர்ல்டு டூர்’ அரங்கில் 5வது பட்டம் வென்றது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement