சென்னை: பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜனுக்கு மதுரையில் சிலைஅமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: திரைப்படப் பின்னணிப் பாடகர், கலைமாமணி டி.எம்.சவுந்தரராஜன் நூற்றாண்டில், அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் மந்தைவெளி வெளிவட்டச் சாலைக்கு `டி.எம்.சவுந்தரராஜன் சாலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது மகிழ்ச்சி தருகிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான `செம்மொழியான தமிழ் மொழியாம்’ என்ற பாடலில் இறுதியாக அவரின் குரலும், பங்கேற்பும் இருந்தது.
மதுரையில் அவர் பிறந்து, வாழ்ந்த பகுதியில் உருவச் சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்வைத்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.