டெல்லி: டெல்லி ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராகுல் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ள நிலையில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி காந்திசமாதி முன்பாக மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் உண்ணாவிரதம் செய்யவுள்ளனர். டெல்லி ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் கட்சி உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.