அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த இருவர், தண்ணீரில் இருந்து கொண்டே முதலை ஒன்றுக்கு உணவு அளிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஆபத்துடன் விளையாடிய இருவர்
முதலை என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது அவற்றின் தாக்குதல் மற்றும் மிகவும் ஆபத்தானவை என்ற உணர்வு மட்டுமே.
அப்படி இருக்கையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த இருவர், தண்ணீருக்கு நடுவில் நீந்திக் கொண்டிருக்கும் ஒரு அலிகேட்டருக்கு உணவளித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தண்ணீரில் மார்பு ஆழத்தில் அமர்ந்திருக்கும் போது அந்த ஜோடி முதலை ஒன்றுக்கு கையால் சாண்ட்விச் ஊட்டுவதை சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களில் காணலாம்.
குவியும் பார்வையாளர்கள்
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ஒன்லி இன் புளோரிடா என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ள நிலையில், இந்த சாகச வீடியோ 5,00,000க்கும் அதிகமான பார்வைகளையும், 25,000 க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது.
மேலும் இந்த வீடியோவிற்கு சமூக ஊடக பயனர்கள் சுவாரஸ்யமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதில் ஒருவர், இதை செய்வதை நிறுத்துங்கள்..!முதலைகளிடம் இருந்து விலகி இருப்பதையே நாம் அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.