ஆந்திர மாநிலத்தில் கஞ்சா பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, பயிரிடுதல், கடத்தல், உட்கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்தும் தண்டனைக்கு உரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் போலீசாரின் கண்களில் மண்ணை தூவி விட்டு கஞ்சா கடத்தலில் மோசடிக்காரர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நேற்று நடந்த சம்பவம் ஏழுமலையான் பக்தர்களை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேவஸ்தான ஊழியர்ஏனெனில் திருமலைக்கு கஞ்சா கடத்தி செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. திருப்பதியில் உள்ள அலிபிரி சப்தகிரியில் சந்தேகப்படும் வகையில் நபர் ஒருவர் கையில் பையுடன் சுற்றி வந்துள்ளார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு SEB எனப்படும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் அழைத்து சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஒப்பந்த ஊழியர் என்பது தெரியவந்தது.
கஞ்சா பாக்கெட்கள்அவரது கால்களில் பிளாஸ்டிக் பைகளை சுற்றி கட்டி வைத்துள்ளார். அதை அவிழ்த்து சோதனையிட்ட போது 15 பாக்கெட்களில் 150 கிராம் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ஏழுமலையான் பக்தர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து அந்த நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி
ட்விட்டரில் வைரல்இதற்கிடையில் Ganja in Tirumala என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அதில், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, திருமலைக்கு கஞ்சா கடத்தி சென்ற விஷயம் பெரிதும் அதிர்ச்சி அளிக்கிரது. இதனால் பக்தர்கள் மிகவும் கலக்கமும், கோபமும் அடைந்துள்ளனர். இந்த விஷயத்தில் தேவஸ்தானம் விரைந்து செயல்பட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆளுங்கட்சி மீது விமர்சனம்திருமலையின் புனிதத் தன்மையை காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த விஷயத்தை கையிலெடுத்துக் கொண்டு ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுதொடர்பான பதிவில், முன்பெல்லாம் ஆந்திரப் பிரதேசம் என்றால் அன்னப்பூர்ணா எனப் பெயர் பெற்றிருக்கும். அதாவது, வந்தவர்களுக்கு எல்லாம் உணவை வாரி வாரி வழங்கும்.
வைரலாகும் வீடியோ
பரிமாற்றப்படும் முனையம்ஆனால் தற்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் கஞ்சா பிரதேசமாக மாறிவிட்டது என குற்றம்சாட்டியுள்ளார். மற்றொருவர் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு கஞ்சா கடத்தி செல்வதற்கு திருமலை முக்கியமான இடமாக உள்ளது என விமர்சனம் செய்திருக்கிறார். திருப்பதி நகரம் கல்வி நிலையங்களின் முனையம் என்றும், புனிதத் தலம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது.
ஆபரேஷன் பரிவர்த்தனாதற்போது கஞ்சா பரிமாற்றம் செய்யும் இடமாக மாறியிருப்பதாக வேதனை தெரிவித்தார். சமீபத்தில் ’ஆபரேஷன் பரிவர்த்தனா’ என்ற பெயரை கஞ்சா வேட்டையை போலீசார் தொடங்கினர். ஆனால் திருமலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதால் இந்த ஆபரேஷன் கஞ்சா வேட்டையை தடுக்கவா? இல்லை அதிகப்படுத்தவா? என்ற கேள்வி எழுப்பியுள்ளனர்.