திருமணம் முடிந்த சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்ட மணமகன்: உறைந்து போய் நின்ற மணமகள்: வீடியோ


திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமகனின் வெறித்தனமான ஆட்டத்தை கண்டு மணமகள் உறைந்து போய் நிற்கும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகத்தில் வேகமாக பரவி வருகிறது.

மணமகனின் குத்தாட்டம்

பொதுவாகவே சமூக ஊடகத்தில் வித்தியாசமான  திருமண நிகழ்ச்சிகள் குறித்த வீடியோக்கள் அதிகமான பயனர்களால் பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் சமீபத்தில் திருமணம் ஒன்றில் மணமகனும், மணமகளும் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் மாலை மாற்றும் சடங்கு முடிந்து மணமக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கப்படுகிறது, ஆனால் அதிலும் மணமகனின் உற்சாகம் தனி எல்லையில் இருப்பதை பார்க்க முடிகிறது.

ஒரு கட்டத்தில் மணமகனுக்கு மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் போகவே, திருமண மண்டபத்தில் தனியாக நடனமாட தொடங்கி விடுகிறார்.

மணமகன் நடனமாடிய பாடலின் வரிகளும் மிகவும் வேடிக்கையாக இருந்ததால்,  திருமணத்திற்கு வந்த உறவினர்கள் சிரிக்க தொடங்குகிறார்கள்.

 

மணமகனின் வெறித்தனமான ஆட்டத்தை பார்த்து மணமகள் மாப்பிள்ளை ஏன் இப்படி ஆடுகிறார் என்பது புரியாமல் திகைத்து போய் நிற்கிறார்.

திருமணம் முடிந்த சந்தோஷத்தில் குத்தாட்டம் போட்ட மணமகன்: உறைந்து போய் நின்ற மணமகள்: வீடியோ | Groom Non Stop Dance In Marriage Bride Shockeds


சமூக ஊடக பயனர்களின் கருத்துகள்

இந்த திருமணம் தொடர்பான வீடியோ சமூக ஊடகத்தில் பரவ தொடங்கியதையடுத்து, மணமகனின் நடனத்தை பார்த்து மாமனாருக்கு மயக்கமே வந்துவிட்டது என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

anshriva  என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவுக்கு, அதிகமான பார்வைகளும் லைக்குகளும் குவிந்து வருகிறது.





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.