தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் அதிகமாக பேசுபொருளாகுவது எச். ராஜாவின் பேச்சுக்கள்தான். அவர் என்ன பேசினாலும் நெட்டிசன்களுக்கு கண்டெண்டாகிவிடுவது வழக்கம். சில நேரங்களில் எச். ராஜா எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசினாலும் ரசிக்கும்படியாகத்தான் அது இருக்கும்.
மேலும் அவர் அவதூறாக பேசும் விஷயங்களைக்கூட பெரிதாக சில கட்சிகள் எடுத்துக்கொள்ளாது. பல தலைவர்கள் எச். ராஜாவுக்கு எதிர்வினைக்கூட ஆற்றுவதில்லை. ஆவேசமாக பேசும் சீமான்கூட எச். ராஜா விஷயத்தில் சிரித்துக்கொண்டேதான் பதில் அளித்து செல்கிறார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ”ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தன் கருணாநிதி” என்று பேசிய எச். ராஜா, தற்போது ஸ்டாலின் அவரது கண்ட்ரோலில் இல்லை என்று விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ”திமுகவில் தடி எடுத்தவன் ‘;தண்டல்காரனா’ இருக்கிறான்.
கட்சியும், அமைச்சர்களும், குடும்பமும் என எதுவுமே ஸ்டாலினின் கண்ட்ரோலில் இல்லை” என அவர் கூறினார். பின்னர் ”மாண்புமிகு பிரதமர் மோடி” என்று சொல்வதற்கு பதிலாக ”மாண்புமிகு பிரதமர் ஸ்டாலின்” என்று அவர் தடுமாறி பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை மதுரை மண்டல தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் பிரபு சந்திரன் என்பவர் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த ட்வீட்டில், ”மாண்புமிகு பிரதமர் ஸ்டாலின் அவர்களுக்கு… இவர போயி தப்பா நெனச்சுட்டமேயா” என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த பேட்டியில் முழுசாக பேசிய எச். ராஜா, ” தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் புழுகு மூட்டையாக உள்ளது என்றார். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் இன்னும் செயல்படுத்தவில்லை, திமுக மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று வருகிறது, தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை தங்கள் திட்டங்கள் என கூறி வருகிறது. ராகுல்காந்தி நல்ல மனநிலையில் எப்போதும் பேச மாட்டார். ராகுல்காந்திக்கு எதிராக தீர்ப்பு வந்ததால் அவரது எம்.பி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது என கூறினார்.