தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து, இந்த அருவிக்கு நீர்வரத்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும்.
இந்த நிலையில் கொடைக்கானல் மற்றும் சுற்றுப்புற பகுதியில் மழை பெய்ததால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று வார விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து கொண்டிருந்த போது திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில், 30க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ளனர்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வந்த வெள்ளத்தால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.