எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
ஆபாசபட நாயகிக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தான் எந்த ஒரு குற்றமும் செய்யவில்லை என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்க அதிபர் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சியின் சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்து, அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில் ஆபாச பட நாயகிக்கு தேர்தல் நிதியை வழங்கிய விவகாரத்தில் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. கடந்த 2016 அதிபர் தேர்தலுக்கு முன்னதாக இந்த சர்ச்சை கிளம்பியது குறிப்பிடதக்கது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆபாசபட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ், இவரது இயற்பெயர் ஸ்டெபானி கிளிஃபோர்ட். போர்ன் ஹப், நாட்டி அமெரிக்கா, ரெட் வேப் உள்ளிட்ட ஆபாச வலைதளங்களில் இவரின் வீடியோக்கள் பிரபலமானவை. இந்தநிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஸ்டோர்மி டேனியல்ஸுடன் கடந்த 2006ம் ஆண்டில் நெருக்கமாக பழகியுள்ளார்.
இந்தசூழலில் கடந்த 2016 அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்பு, குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், கடந்த காலத்தில் தன்னுடன் நெருங்கிய உறவில் இருந்ததாக
ஆபாசபட பிரபலம் ஸ்டோர்மி டேனியல்ஸ் தெரிவித்தார். அதிபர் தேர்தல் நடைபெற இருந்த சூழலில் ஆபாசபட நாயகியின் பேச்சு வைரலானது, அது டிரம்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
போர்ன் பட நாயகியின் குற்றச்சாட்டை டிரம்ப் தொடர்ந்து மறுத்தார். அதைத் தொடர்ந்து ஸ்டோர்மி டேனியல்ஸை பேச விடாமல் இருக்க 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் டிரம்ப் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பணமானது பிரச்சார நிதியில் இருந்து சட்ட விரோதமாக வழங்கப்பட்டதாக ஆட்சி மாறியதும் டிரம்ப் மீது வழக்குகள் தொடரப்பட்டது.
மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து கசிந்த ரகசிய ஆவணங்களை மேற்கோள் காட்டி, டிரம்ப் தனது ட்ரூத் சமூக தளத்தில், “முன்னணி குடியரசுக் கட்சி வேட்பாளர் மற்றும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் அடுத்த வாரம் செவ்வாய்கிழமை கைது செய்யப்படுவார்கள். போராட்டத்திற்கு தயாராகுங்கள்..” என்று எழுதினார்.
அமைச்சருக்கு கட்டிங்? ஆவேசமான மதுப்பிரியர்!
இந்தசூழலில் தேர்தல் நிதி கையாண்டது தொடர்பாக டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான ஆவணங்கள் உறுதியாக உள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் அரசியல் நோக்கர்கள் கூறிவருகின்றனர். இந்தசூழலில் நான் என்ன குற்றம் செய்தேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பிட்டு பட நாயகிக்கு பணம் கொடுத்த விவகாரம்; டொனால்ட் டிரம்ப் கைது.!
2024 தேர்தலுக்கான முதல் பிரச்சாரத்தில் டிரம்ப் பேசும்போது, ‘‘அமெரிக்க வெள்ளை மாளிகையின் கட்டளையின் கீழ், நியூயார்க் நகர அநீதித்துறை நான் செய்யாத குற்றத்திற்காக என்னை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனக்கு இரண்டு முகங்கள் கிடையாது. நான் எந்த வித பெண்களிடமும் பழகியது கிடையாது. எனக்கு ஒரு மனைவி உள்ளார்’’ என அவர் தெரிவித்தார்.