மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலாஜி முருகதாஸ் என்பவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து ட்வீட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ், அப்போது தனது நடவடிக்கைகளால் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டவர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு திரைத்துறைக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பட வாய்ப்பு எதுவும் சரியாக அமையவில்லை. தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தனது தயாரிப்பில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக அறிவித்தார். ஆனால் இந்தப் படமும் துவங்கப்படாமலேயே உள்ளது.
இந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் ’தயவுசெய்து டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். இது ஏராளமான உயிர்களை அழித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
ரம்மியை ஒப்பிடும்போது குடியால் அழிந்தவர்கள் தான் அதிகம் என்று பதிவு செய்திருந்தார். அவரது பதிவுக்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் நெட்டசன்கள் கமெண்ட் செய்தனர்.
மற்றொரு பதிவில், மதுவினால் என்னை போன்ற பலர் அனாதையாக மாறியுள்ளனர். பலர் குடும்பத்தை இழந்துள்ளனர். என்னை அரசியலுக்கு இழுக்காதீர்கள். உங்களால் என்னை சமாளிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பாலாஜி முருகதாஸை நெட்டிசன்கள் வச்சி செய்து வருகின்றனர். அவருக்கு ஆதரவாகவும் ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
newstm.in