வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ-உக்ரைனுக்கு ஆயுத வினியோகத்தை மேற்கத்திய நாடுகள் அதிகரித்து இருப்பதை அடுத்து, கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரசில், அணு ஆயுதக் கிடங்கை அமைக்க இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.
இது குறித்து ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது:
உக்ரைனுக்கு சக்தி வாய்ந்த யுரேனிய வெடி பொருட்களை அளிக்க இருப்பதாக பிரிட்டன் சமீபத்தில் அறிவித்துள்ளது. இது, இருதரப்பு படைகளுக்கு மட்டுமின்றி, உக்ரைன் மக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும்.
இந்த தாக்குதலை எதிர்கொள்ள, பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை சேகரித்து வைக்கும் கிடங்கை அமைக்க ரஷ்யா திட்டமிட்டு உள்ளது.
பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில், அமெரிக்கா அணு ஆயுதங்களை வைத்துள்ளது. அவர்கள் காலங்காலமாக பின்பற்றி வருவதைத் தான், நாங்கள் இப்போது செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement