மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 18.5 ஓவரில் 258 ஓட்டங்கள் இலக்கை எட்டி இமாலய சாதனை படைத்துள்ளது.
இமாலய ஸ்கோர்
மேற்கிந்திய தீவுகள் – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 258 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக சார்லஸ் 46 பந்துகளில் 118 ஓட்டங்கள் விளாசினார். மேயர்ஸ் 27 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்தார்.
@AP
சிக்ஸர் மழை
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணியில் டி காக் மற்றும் ஹென்ரிக்ஸ் இருவரும் ருத்ர தாண்டவம் ஆடினர்.
சதம் விளாசிய டி காக் 44 பந்துகளில் 100 ஓட்டங்களும், ஹென்ரிக்ஸ் 28 பந்துகளில் 68 ஓட்டங்களும் விளாசினர்.
@Phill Magakoe/AFP/Getty Images
@AFP
சரித்திர வெற்றி
இறுதி கட்டத்தில் கேப்டன் மார்க்ரம் அதிரடியாக 38 ஓட்டங்கள் விளாச, 18.5 ஓவரிலேயே தென் ஆப்பிரிக்கா 259 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இரு அணிகளும் சேர்த்து 517 ஓட்டங்கள் எடுத்துள்ளன. டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி செய்த மிகப்பெரிய சேஸிங் இதுவாகும்.
@AFP