எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு நாடு முழுக்க ஆதரவு அலை வீசி வருகிறது. தமிழகம் முழுக்க உள்ள நகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இருப்பினும், தமிழக காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக இல்லை என்ற விமர்சனமும் இருந்து வருகிறது. இதற்கிடையே, ராகுல் காந்தி தன்னுடைய டிவிட்டர் சுயவிவர குறிப்பில் “Dis’Qualified MP“ என மாற்றியுள்ளார். அது கவனம் பெற்று வருகிறது. இந்த நிலையில், இன்னும் 3 நாட்களில் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவியை பெற்று தருவோம் என ஆர்.எஸ் பாரதி சபதம் ஏற்றுள்ளார்.
சிவகங்கையில் திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் விழா மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான எடப்பாடி , கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
எடப்பாடி பழனிசாமி
”அதிமுகவில் நம்பிக்கை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என்றும் சசிகலாவை சின்னம்மா என்று கூறி காலை பிடித்துக்கொண்டு பதவியேற்று பின்னர் அவர்களை தூக்கி எரிந்து துரோகம் விளைவித்தவர் தான் எடப்பாடி பழனிசாமி” என எடப்பாடி விமர்சித்தனர்.
மோடிக்கு கேடு
”பிரதமர் மோடிக்கு நேற்று முதலே கேடு காலம் ஆரம்பமாகிவிட்டது. ராகுல் காந்தியை பதவிநீக்கம் செய்தது முதலே அவருக்கான கவுண்டவுன் துவங்கிவிட்டது. உடனடியாக ராகுலின் பதவியை பறித்த சபாநாயகர், ஏன் கடந்த 4 ஆண்டுகளாக துனை சபாநாயகர் தேர்தலை ஏன் நடத்தவில்லை” என்று கேள்வி எழுப்பிய ஆர்.எஸ். பாரதி
இன்னும் 3 நாட்களில் ராகுல் காந்திக்கு மீண்டும் பதவியை பெற்று தருவோம் என பேசினார்.