சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து நாளை சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்கின்றனர். ராகுல் காந்தி தகுதிநீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு உடை அணிந்து பங்கேற்க உள்ளோம் என காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
