சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்,தேர்தல் அறிக்கையின் போது அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று கூறிவிட்டு இப்போது தகுதி உள்ள மகளிருக்கு மட்டும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று குறிப்பிடுவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு ரேஷன் அட்டை உள்ளது என்பதற்காக அனைவருக்கும் ரூ.1000 கொடுக்க முடியாது. சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் நாம் ஒரு லட்சத்து ஐந்து ஆயிரம் வாங்குகிறோம். நம்மிடம் குடும்பஅட்டை உள்ளது என்ற காரணத்துக்காக நமக்கும் தர முடியுமா என்ற கேட்டார்?
மேலும் குடும்பஅட்டைதாரர் அனைவருக்கும் எப்படி ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படும்? வசதியுடன் வாழும் குடும்பத்தலைவிகளுக்கு ஏன் தரவேண்டும்? என கூறினார்.
மீண்டும் தொடர்ந்து பேசிய அமைச்சர் உரிமைத்தொகை அண்ணா பிறந்த தினமான செப்டெம்பர் 15-ல் இருந்து அரசு வகுத்துள்ள விதிமுறைகள் கீழ் பரிசீலித்து வழங்கப்படும் என்று தெரிவித்தார்.