ஹரியைப் போல் எழுதப்படும் இளவரசர் ஆண்ட்ரூவின் சுயசரிதை புத்தகம்? வெளியான தகவல்


பிரித்தானிய இளவரசர் ஹரியின் ஸ்பேர் புத்தகத்தைப் போலவே, இளவரசர் ஆண்ட்ரூ தனது சுயசரிதையை எழுத அமெரிக்க எழுத்தாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசர் ஆண்ட்ரூ

மகாராணி இறந்தபோது அவரிடமிருந்து எந்த வித பரம்பரை சொத்தையும் தாம் பெறவில்லை என்று இளவரசர் ஆண்ட்ரு தனது நண்பர்களிடம் கூறியதாக தெரிய வந்தது.

மேலும், அரச நிதியைக் குறைக்கும் பொருட்டு, சார்லஸ் மன்னரின் திட்டங்களால் அவர் மீதான நிதி அழுத்தங்கள் அதிகரிக்கப்படலாம்.

இதன்மூலம் அவர் விலையுயர்ந்த பராமரிப்பு செலவுகளை செலுத்த முடியாவிட்டால், விண்ட்சரில் உள்ள அவரது அரச இல்லத்தில் இருந்து வெளியேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

இளவரசர் ஆண்ட்ரூ/Prince Andrew @Max Mumby/Indigo/Getty Images

சுயசரிதைக்கான பேச்சுவார்த்தை

எனவே அவர் பொருளீட்டவும், தன்னை ஆதரிக்கவும் வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறப்படும் நிலையில், தற்போது ஆண்ட்ரூ சுயசரிதை புத்தகத்தை எழுத பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளவரசர் ஹரியின் சர்ச்சைக்குரிய புத்தகமான ஸ்பேரை அடிப்படையாகக் கொண்டு, இந்த நினைவுக் குறிப்பானது ஸ்பேர் 2.0 என எழுத்தப்படும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுவதாக தெரிய வந்துள்ளது.

இளவரசர் ஆண்ட்ரூ/Prince Andrew @Getty Images

இதற்காக, ஆமி வைன்ஹவுஸ் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய அமெரிக்க எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் Daphne Barak உடன் ஆண்ட்ரூ விவாதித்ததாக கூறப்படுகிறது.

ஹரியைப் போல் எழுதப்படும் இளவரசர் ஆண்ட்ரூவின் சுயசரிதை புத்தகம்? வெளியான தகவல் | Source Says Prince Andrew Will Write Autobiography @Pacific Press | Lightrocket | Getty Images 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.