36 இணைய தளசேவை செயற்கைக் கோள்களுடன் இஸ்ரோவின் எல்.வி.எம். மார்க் – 3 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.
இங்கிலாந்தை சேர்ந்த ஒன்வெப் நிறு வனத்தின் 72 செயற்கைக் கோள்களை ஏவ, இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல் நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி கடந்த அக்டோபரில் 36 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன.
அதை தொடர்ந்து 2வது கட்டமாக எஞ்சிய செயற்கைக் கோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து இன்று காலை 9 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளன. 640 டன் எடையுடன் இந்தியாவிலேயே அதிக எடைகொண்ட இந்த ராக்கெட், சுமார் 5,805 கிலோ எடைகொண்ட செயற்கைக் கோள்களை பூமியின் தாழ்வான வட்டப்பாதையில் செலுத்த உள்ளது.