எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
மகன்கள் யாத்ரா, லிங்கா வளரட்டும் என கெரியரில் இருந்து பிரேக் எடுத்திருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்நிலையில் 8 ஆண்டுகள் கழித்து மீண்டம் படம் இயக்கி வருகிறார்.
லால் சலாம் என்கிற அந்த படத்தில் விஷ்ணு விஷாலும், விக்ராந்தும் ஹீரோவாக நடித்து வருகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கவுரவத் தோற்றத்தில் நடிக்கிறார். அவரின் தங்கையாக ஜீவிதா ராஜசேகர் நடிக்கிறார்.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தான் வேலை செய்யும்போது எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தன் சந்தோஷத்தை ரசிகர்களுடன் ஷேர் செய்து வருகிறார் ஐஸ்வர்யா.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடந்து கொள்ளும் விதம் விஷ்ணு விஷாலுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. படத்தில் இருந்து விலக முடிவு செய்தார். ஆனால் விக்ராந்த் தான் அவரை சமாதானம் செய்தார். ஆனாலும் ஐஸ்வர்யா மீது கோபத்தில் இருந்து வருகிறார் விஷ்ணு விஷால். எந்த நேரத்திலும் படத்தில் இருந்து விலகலாம் என தகவல் வெளியானது.
பிரச்சனை என்று தகவல் வெளியான நேரத்தில் விஷ்ணு விஷால் போட்டிருக்கும் ட்வீட்டை பார்த்தால் அவருக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீது கோபம் இருப்பதாகவே தெரியவில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.
தன் தந்தை ரஜினியை போன்றே ஐஸ்வர்யாவுக்கும் கடவுள் பக்தி அதிகம். அடிக்கடி கோவில்களுக்கு சென்று வருகிறார். இந்நிலையில் அம்மன் கோவில் ஒன்றில் லால் சலாம் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.
அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு ஐஸ்வர்யா கூறியதாவது,
இது வெள்ளிக்கிழமை….பழைய அம்மன் கோவிலில் ஷூட்டிங்… இது எதேச்சையாக நடந்தது எனலாம்… கடவுள் தன் குழந்தையுடன் தனக்கே உரிய முறையில் பேசுவார் என நான் நம்புகிறேன் என தெரிவித்தார்.
Vishnu Vishal: 2வது மனைவியையும் பிரிந்துவிட்டாரா விஷ்ணு விஷால்?!
அந்த ட்வீட்டை பார்த்த விஷ்ணு விஷாலோ,
ஏமாத்திட்டீங்க… என்னுடன் இருக்கும் புகைப்படத்தை நீங்கள் போஸ்ட் செய்யவில்லை என கமெண்ட் போட்டிருக்கிறார்.
அதை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
ஐஸ்வர்யா மீது கோபத்தில் இருந்தால் விஷ்ணு விஷால் இப்படி உரிமையாக ட்வீட் போட்டிருக்க மாட்டார். அவர்கள் அக்கா, தம்பி போன்று பழகுகிறார்கள். லால் சலாம் படத்தில் எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை.
ஃபர்ஸ்ட் லுக் சஸ்பென்ஸ் போய்விடும் என விஷ்ணு விஷாலின் புகைப்படத்தை வெளியிட்டிருக்க மாட்டார் ஐஸ்வர்யா என தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தலைவர் எங்கம்மா என ரஜினி ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் அந்த பட வேலையை முடித்துவிட்டு தான் லால் சலாம் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
Aishwarya Rajinikanth: சொன்னது 60 பவுன், கிடைத்தது 100 பவுன்: ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் விசாரிக்கும் போலீஸ்?
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிடுவதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். வீட்டில் 60 பவுன் நகைகள் திருடு போயிருக்கிறது. பணிப்பெண்ணே நான்கு ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக நகையை திருடி ரூ 1 கோடிக்கு வீடு வாங்கியிருக்கிறார். அப்படி இருக்கும்போது உங்களால் எப்படி ஐஸ்வர்யா இந்த அளவுக்கு நிதானமாக இருக்க முடிகிறது என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.