எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
மாறிய சிம்பு மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வெற்றியை தொடர்ந்து சிம்புவின் மார்க்கெட் மளமளவென உயர்ந்தது. இதைத்தவிர பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, பல விளம்பரங்கள் என சிம்புவிற்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன. இதன் காரணமாக பல ஆண்டுகாலமாக ஒரே சம்பளத்தில் இருந்த சிம்பு இதுதான் சரியான நேரம் என கருதி தன் சம்பளத்தை பலமடங்கு உயர்த்தினார். கிட்டத்தட்ட 40 கோடி வரை சம்பளமாக சிம்பு கேட்டதால் பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் செய்வதறியாது திகைத்தனர். ஆனால் ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிப்பில் நடிக்கும் சிம்பு இப்படத்திற்காக தன் சம்பளத்தை பல மடங்கு குறைத்துள்ளார். இது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகின்றது
காரணம் சிம்புவை வைத்து படமெடுக்க நினைத்த பல தயாரிப்பாளர்களுக்கு தன் சம்பளத்தின் மூலம் ஷாக் கொடுத்தார் சிம்பு. ஆனால் கமல் தயாரிப்பில் நடிக்க வாய்ப்பு வந்ததும் சிம்பு கமலுக்காக தன் சம்பளத்தை பலமடங்கு குறைத்துள்ளார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசி வந்தனர். ஆனால் சிம்பு சம்பளத்தை குறைக்க உண்மையான காரணம் படத்தின் பிரம்மாண்டம் தானாம். தேசிங்கு பெரியசாமியின் கதை மிகப்பிரம்மண்டமாக இருந்ததாலும், படத்தின் பட்ஜெட் 100 கோடிக்கு மேல் என்பதாலும் தான் சிம்பு தன் சம்பளத்தை குறைத்துள்ளாராம். மேலும் தன்னை வைத்து இதுபோல பிரம்மாண்டமான படத்தை தயாரித்தால் தன் சம்பளத்தை எவ்வளவு வேண்டுமானாலும் குறைத்துக்கொள்வேன் என சிம்பு தன் கொள்கையை தளர்த்துள்ளாராம்
பத்து தல கிருஷ்ணா இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் உருவான பத்து தல திரைப்படம் அடுத்த வாரம் திரையில் வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இப்படம் பல சிக்கல்களை சந்தித்து வந்தது. தற்போது ஒருவழியாக இப்படம் திரையில் வெளியாகவுள்ளது. முதலில் சிம்பு பத்து தல படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதாகவே இருந்தது. ஆனால் சிம்புவின் நடிப்பினால் இம்ப்ரஸ்ஸான இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கதையின் போக்கை மாற்றி சிம்புவை ஹீரோவாக மாற்றினார். அதன் பிறகு இப்படத்தின் ரீச் அடுத்தகட்டத்துக்கு சென்றது. தற்போது மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் மூலம் சிம்பு ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகின்றது. அதற்கு ஏற்றாற்போல படத்தின் பாடல்களும், ட்ரைலரும் அமைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது
சிம்பு நம்பிக்கை சமீபத்தில் தான் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் சிம்பு உணர்ச்சிகரமாக பேசியது மட்டுமல்லாமல் பாட்டு பாடி, நடனமாடி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்தார். இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு பத்து தல படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றது. இதில் பேசிய சிம்பு, பத்து தல படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரத்திற்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்துள்ளார் கிருஷ்ணா. கடைசியாக விக்ரம் படத்தில் தான் இவ்வாறு படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரத்திற்கும் முக்கியத்தும் கொடுக்கப்பட்டது. அதைப்போல பத்து தல படத்திலும் நடிகர்கள் அனைவர்க்கும் சமனான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இப்படமும் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை பெரும் என நம்புவதாக சிம்பு கூறியுள்ளார். இந்நிலையில் சிம்பு இவ்வாறு விக்ரம் படத்தை புகழ்ந்து பேசியதை அடுத்து ரசிகர்கள் சிலர் ,லோகேஷ் படத்தில் நடிப்பதற்காக சிம்பு வலைவிரிக்கின்றாரோ என பேசி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது