அனைத்து சாதியினரும் கருவறைக்குள்ள போய்ட்டா மட்டும்.? – சீமான் வீடியோ வைரல்.!

குறிப்பிட்ட ஒரு பிரிவினரே கோயில்களில் அர்ச்சகர்களாக இருந்து வருவதை எதிர்த்து, கொண்டு வரப்பட்ட திட்டம் தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம். தற்போதய இடஒதுக்கீட்டை எதிர்க்கும் சிலர், 2 ஆயிரம் ஆண்டுகளாக குறிப்பிட்ட பிரிவினரே கோயில்களில் ஆதிக்கம் செலுத்தி வந்ததை கேள்வி கேட்பதில்லை என்பது திராவிட இயக்கத்தவர்களின் குற்றச்சாட்டுகளாக இருந்து வருகிறது.

கடந்த 2007ஆம் ஆண்டில் அனைத்து ஜாதியினரையும் சேர்ந்தவர்கள் அர்ச்சகராகும் திட்டம் கொண்டு வரப்பட்டபோது தமிழ்நாட்டில், சென்னை, திருவண்ணாமலை, மதுரை, திருச்செந்தூர், பழநி, ஸ்ரீரங்கம் ஆகிய ஆறு இடங்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் துவங்கப்பட்டன. இதில் 240 பேர் பயிற்சிக்காக சேர்ந்தனர்.

ஆனால், இந்தத் திட்டத்தை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்ட பிறகு, முதல் பேட்ச்சிற்குப் பிறகு புதிதாக மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. அனைத்து மாணவர்களும் படித்து முடித்த பிறகு அந்தப் பள்ளிகள் செயல்படாமல் போயின.

மேலும், 2020ஆம் ஆண்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனத்திற்கென புதிய விதிகள் கொண்டுவரப்பட்டன. அந்த புதிய விதிகளின்படி, அர்ச்சகராக சேர்வோர் 18 வயதிலிருந்து 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டுமென்றும் ஆகமப் பள்ளிகளில் பயிற்சி பெறுவோராக இருக்க வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில்

மீண்டும் ஆட்சி அமைத்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் அனைத்து ஜாதியைச் சேர்ந்த 28 பேரை பல்வேறு கோவில்களில் தமிழ்நாடு அரசு நியமனம் செய்தது. இவர்களில் 4 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது என்பது, தமிழகத்தின் முன்னோடி திட்டமாக கருதப்படுகிறது. நாடு முழுவதும் இத்திட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது முக்கியமில்லை என

பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, ‘‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என கூறுகிறீர்கள், அனைத்து சாதியினரும் கருவறைக்குள் போய்ட்டா என்ன நடந்து விடும். அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆக வேண்டும் என்பது பிரச்சனை இல்லை, அன்னைத் தமிழில் அர்ச்சனை இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம், அது தான் முதன்மையானது’’ என அவர் பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது முக்கியமில்லை எனவும், குறிப்பிட்ட பிரிவினரின் குரலாக சீமானின் கருத்து உள்ளது எனவும் திராவிட இயக்க ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அன்னைத் தமிழ் அர்ச்சனை தான் முதன்மையானது என சீமானின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.