சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். வரும் ஏப்ரல் 3-ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வர உள்ளது.
ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் விலையில் போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்நிறுவனம் இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ எனும் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. மூன்று வண்ணங்களில் இந்த போன் அறிமுகமாகி உள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.6 இன்ச் திரை அளவு
- ஃபுள் ஹெச்டி+ டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் 6nm மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட்
- பின்பக்கத்தில் இரண்டு கேமரா. அதில் 50 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா
- முன்பக்கம் 5 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது
- 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்
- 4ஜி இணைப்பு வசதி
- யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட்
- 5,000mAh பேட்டரி
- 10 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
- இந்த போனின் விலை ரூ.8,999
And it’s here!
The #SmartphonesKaBAAP, yaane ki Infinix ka naya #HOT30i is here at a special launch day price of just Rs. 8,999!
Sales start 3rd April, 12 noon, only on @flipkart pic.twitter.com/87jd3JtZ9D
— Infinix India (@InfinixIndia) March 27, 2023