இஸ்ரேலில் என்ன நடக்கிறது? பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முடிவிற்கு ஏன் இவ்ளோ எதிர்ப்பு?

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
இஸ்ரேல் நாட்டில் லிகுயிட் கட்சியின் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராக பதவி வகித்து வருகிறார். தீவிர வலதுசாரி. இவர் ‘Bibi’ என அழைக்கப்படுகிறார். இஸ்ரேல் நாட்டு வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக இருந்த பெருமையை பெற்றவர். 15 ஆண்டுகளுக்கு மேல் பிரதமர் பதவி வகித்துள்ளார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதை தொடர்ந்து மறுத்து வருகிறார்.

நீதித்துறை சீர்திருத்தம்

இந்த சூழலில் நீதித்துறையில் சீர்திருத்தங்கள் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதன் அதிகாரத்தை கட்டுப்படுத்தி அரசுக்கும், நீதித்துறைக்கும் சம அதிகாரம் என்ற நிலையை உருவாக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது தனது ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தப்பித்துக் கொள்ள பெஞ்சமின் நெதன்யாகு செய்யும் சூழ்ச்சி என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர்.

அதிபர் புடினை முடிந்தால் கைது செய்து பாருங்கள்; ரஷ்ய முன்னாள் அதிபர் சவால்.!

இஸ்ரேல் மக்கள் போராட்டம்

அதுமட்டுமின்றி நீதித்துறை தன்னிச்சையாக செயல்படக் கூடிய அமைப்பு. இதை மாற்றி அமைத்தால் நாட்டின் இயல்பே சீர்குலைந்து விடும் என வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நீதித்துறையில் சீர்திருத்தங்கள் செய்யக் கூடாது எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தேசிய அளவில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

அமைச்சர் பதவி காலி

இதனால் இஸ்ரேல் ஸ்தம்பிக்கும் அளவிற்கு சென்றுள்ளது. இதற்கிடையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நடவடிக்கைக்கு ஆளும் அரசில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது. அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் தனது கண்டனத்தை பதிவு செய்தார். உடனே அவரை பதவியில் இருந்து பிரதமர் தூக்கி விட்டார். இதனால் நாடு முழுவதும் போராட்டங்கள் மேலும் தீவிரம் அடைந்துள்ளன.

நம்பிக்கை இல்லா தீர்மானம்

இந்த விவகாரம் அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. ஆனால் ஆளும் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியை தழுவியது. இந்நிலையில் டெல் அவிவ், மேற்கு ஜெருசலம் ஆகிய நகரங்களின் தெருக்கள் முழுவதும் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிகிறது. முக்கிய நெடுஞ்சாலைகளை போராட்டக்காரர்கள் தடுத்துள்ளனர்.

காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம்..பிரிட்டனில் பெரும் பதற்றம்.. இந்திய கொடி அவமதிப்பு.!

பெஞ்சமின் நெதன்யாகு முடிவு

உருவ பொம்மை எரிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த போராட்டம் படிப்படியாக தீவிரமடைந்துள்ளது. இதனால் நீதித்துறையில் சீர்திருத்தம் செய்யும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படியே போனால் நாட்டின் நிலை மிகவும் மோசமடைந்து விடும் எனக் கருதி தன்னுடைய முடிவில் மாற்றம் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இன்றைய தினம் நாட்டு மக்களை சந்தித்து உரையாட திட்டமிட்டிருந்தார். ஆனால் அதுவும் திடீரென ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இஸ்ரேலில் நடந்து வரும் போராட்டம் வரலாறு காணாத நிகழ்வு எனப் பலரும் கூறி வருகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தினந்தோறும் ஆர்ப்பரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.