கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்த சுமார் 32 மதிக்கத்தக்க பெண் ஒருவரின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவரது முன்னாள் கணவர் இணையத்தில் பதிவேற்றம் செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். உடனடியாக அப்பெண் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக புகார் மனு ஒன்றை அளித்தார்.
இப்புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி சைபர் கிரைம் போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் உத்தரவிட்டார். சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் மேற்பார்வையில் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி, மிரட்டிய தோவாளை பகுதியை சேர்ந்த தங்கம் என்பவரின் மகன் சதீஷ் பெருமாள் (34) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட சதிஷ் பெருமாள் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அந்தப் பெண் இருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் சேர்ந்து வாழும் போது எடுத்த அந்த பெண்ணின் ஆபாச படத்தினை இணையதளத்தில் வெளியிட்டதன் பேரில் சதீஷ் பெருமாளை போலீசார் கைது செய்துள்ளனர்.