இங்கிலாந்தின் கிழக்கு டேவான் பகுதியில் வீட்டின் தோட்டத்தில் 2ம் உலகப்போரில் வீசப்பட்ட கையெறி குண்டு வெடிமருந்துடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மண்ணில் புதைந்திருக்கும் எலும்புகளைத் தேடுவதில் ஆர்வம் கொண்ட 9 வயது சிறுவன் தனது வீட்டுத் தோட்டத்தில் சிறிய பள்ளம் தோண்டி எலும்புகளைத் தேடிய போது, கையெறி குண்டை கண்டெடுத்துள்ளார்.
சிறுவனின், தாயார் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், வெடிகுண்டு செயலிழப்பு படையினர் வரவழைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அப்போது, குண்டில் வெடிமருந்து இருப்பது கண்டறியப்பட்டதால், கையெறிகுண்டினை பாதுகாப்பாக அப்புறப்படுத்திய படையினர் அதனை மற்றொரு பகுதிக்கு எடுத்துச் சென்று செயலிழக்கச் செய்தனர்.