தூத்துக்குடியில் இருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஹைட்ரஜன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, நெல்லை அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
180 ஹைட்ரஜன் சிலிண்டர்களுடன் நெல்லை – நாகர்கோவில் சாலையில் சென்ற லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, கொங்கன்தான் பாறை விலக்கு பகுதியில் சாலை நடுவே கவிழ்ந்தது.
இதில், லாரியில் இருந்த பெரும்பாலான சிலிண்டர்கள் சாலையில் சரிந்து விழுந்தன. தீயணைப்புத்துறையினர், சிலிண்டர்கள் மூலம் அசம்பாவித சம்பவம் நடக்காமல் தடுக்க அதன் மீது தண்ணீரை பீச்சி அடித்து குளிர்வித்தனர்.
இதனை அடுத்து, லாரி அப்புறப்படுத்தப்பட்டு, சிலிண்டர்களை பத்திரமாக மீட்கும் பணி நடைபெற்றது.