சிரிப்பூட்டும் வாயு என்றழைக்கப்படும் நைட்ரஸ் ஆக்சைடு வாயுவானது தடை செய்யப்பட்ட போதைப் பொருளாக இங்கிலாந்து அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறமற்ற வாயுவான நைட்ரஸ் ஆக்சைடு, மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
இங்கிலாந்தில் சிறு சிறு குப்பிகளில் அடைத்து விற்கப்படும் இந்த வாயுவை இளைஞர்கள் வாங்கி, அதனை பலூனில் நிரப்பி சிறுக சிறுக முகர்ந்து போதைக்காகவும், பரவச மனநிலைக்காகவும் பயன்படுத்துகின்றனர் என்று கூறப்படுகிறது.
நைட்ரஸ் ஆக்சைடை அதிகளவு எடுத்துக் கொண்டாலோ, தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டாலோ தலைவலி, தலைச்சுற்றல், சித்தப்பிரமை, ஒலி சிதைவு உள்ளிட்ட பிரச்சனைகளை கொண்டுவருவதுடன் வலிப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.