பெரம்பலூர்:பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் பெரியசாமி மலைக்கோவில் கும்பாபிஷேகத்திற்காக உலகிலேயே மிகப்பெ ரிய சுடு கழிமண் சிற்பங்கள் 7லாரிகளில் கொண்டு வராப்பட்டு கிரேன்கள் மூலம் இரவோடு இரவாக பொறுத்தப்பட்டது. பெரம்பலூர் அருகேயூள்ள சிறுவாச்சூரில் புகழ்பெற்ற அருள்மிகு மதுர காளியம் மன் திருக்கோவில் உள்ள து. மாவட்டத்தின் சுற்றுலா தலமான இக்கோயில், இந் துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்உள்ளது. இக் கோவிலின் பூர்வீகக் கோ வில் செல்லியம்மன், செங் க மலையான், பெரியசாமி உள்ளிட்ட தெய்வங்களுடன் அருகே பச்சை மலை தொடர்ச்சியிலுள்ள பெரியசாமி மலையடிவாரத்தில் உள்ள து.இந்த கோவிலின் கும்பா பிஷேகம் இன்று(27 ம்தேதி) அதிகாலை நடை பெறுகிற து.
வருகிற ஏப்ரல் 5ஆம் தே தி அருள்மிகு மதுரகாளிய ம்மன் திருக்கோவில் கும் பாபிஷேகம் நடைபெறவுள் ளது. இந்நிலையில் பெரியசாமி மலைக்கோவில் கும்பாபி ஷேகத்தையொட்டி ஏற்கன வே இருந்த சுடு கழிமண் சிற்பங்கள் மர்ம நபர்க ளால் உடைக்கப்பட்டதால் பாண்டிச்சேரி மாநிலம், வில்லியனூர் அருகேயுள்ள ஒதியம் பட்டு கிராமத்தில் மீண்டும் புதிதாக தயாரிக் கப்பட்ட பல லட்சம் மதிப்பி லான சுடு கழி மண் சிற்ப ங்கள் நேற்று மாலை தொட ங்கி இரவோடு இரவாக கொண்டு வரப்பட்டது.
இதற்காக ஏற்கனவே உடை பட்ட சிலைகளுக்கு பாலால யம் செய்து அதன் உயிர் களை இறக்கி வைத்த சூள த்திற்கு நேற்று கிருஷ்ண முனுசாமி ஸ்தபதி சூளத்தி ற்கு பூஜை செய்து வழிபா டுகளை தொடக்கி வைத் தார். பிறகு புதிய சிற்பங்க ளானபொன்னுசாமி சிலை, பெரியசாமி சிலை, கிணத் தடியார், ஆத்தடியார், செல் லியம்மன், சப்த கன்னியர், செங்கமலையான், கொரப் புலியான்,புலிகருப்பையா, குதிரைகள், வீரர்சிலைகள், 18சித்தர்களின் சிலைக ளும் என புவிசார் குறியீடு பெற்ற வில்லியனூர் ஒதி யம்பட்டு பகுதியில்புதிதாக தயாரிக்கப்பட்டு 7 லாரிக ளில் கொண்டுவரப்பட்டு கி ரேன்களின் மூலம் பெரிய சாமி மலைக்கோலில் வளா கத்திற்குக் கொண்டுவரப் பட்டது.
இந்து சமய அறநிலையத் துறை திருச்சி மண்டல துணை ஆணையர் ஞான சேகரன், பெரம்பலூர் மாவ ட்ட அறங்காவலர் குழுத் த லைவர் கலியபெருமாள், திருச்சி மற்றும் பெரம்ப லூர் மாவட்டஉதவிஆணை யர் லெட்சுமணன், செயற் பொறியாளர் பெரியசாமி, உதவி கோட்டப் பொறியா ளர்கள் அழகுமணி, விஜய குமார், செயல் அலுவலர் வேல் முருகன், திருப்பைஞ் ஞீலிகோவில்செயல்அலுவ லர் மனோகரன் ஆகியோர் முன்னிலையில் நிறுவப்ப ட்டது. இதனைத் தொடர்ந்து 216 மஞ்சள் நீர் கலயங்க ளைகொண்டு இன்று அதி காலை நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்திற்கான யாக சாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன.