தனியார் தொலைக்காட்சியின் ‘பிக்பாஸ் சீசன் 4 -ன் வெற்றியாளர் நடிகர் பாலாஜி முருகதாஸ் டாஸ்மாக் கடையை மூட சொல்லி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்த நிலையில், திமுக ஆதரவாளர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கடந்து இரு தினங்களுக்கு முன் டிவிட்டர் சமூக வலைதள பக்கத்தில் நடிகர் பாலாஜி முருகதாஸ் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.
அவரின் அந்த பதிவில், “அன்புள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், தயவுசெய்து டாஸ்மாக்கை மூடுங்க. ஆன்லைன் ரம்மியுடன் ஒப்பிடும் போது, தமிழக அரசின் மதுபான கடை அதிகமான மக்களையும், குடும்பத்தையும் கொன்று அழிக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.
Dear TN CM @mkstalin please Close tasmac 🙏🏼
It kills and ruin more people and family when compared to online rummy.— Balaji Murugadoss (@OfficialBalaji) March 25, 2023
இதனை பார்த்த திமுகவினர் மற்றும் நெட்டிசன்கள் பலர், ஆளும் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் என்று எண்ணி, நடிகர் பாலாஜி முருகதாஸின் முந்தைய வாழக்கையை குறிக்கும் புகைப்படங்களை பகிர்ந்து கடுமையாக விமர்சித்து பின்னூட்டமிட்டு வந்தனர்.
அந்த விமர்சனங்களை பார்த்து நடிகர் பாலாஜி முருகதாஸ், அவரின் பதிவை டெலிட் செய்துவிட்டு பின்வாங்கிவிடுவார்என்றே பலரும் நினைத்தனர்.
ஆனால், அவரோ “என்னை அரசியலுக்கு இழுக்க வேண்டாம். அப்புறம் உங்களால் என்னை சமாளிக்க முடியாது” என்று எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், “மதுவால் குடும்பத்தை இழந்தவர்கள், என்னைப்போல் தமிழ்நாட்டிலும் அனாதைகள் அதிகம்” என்று தன்னுடைய பதிவுக்கான காரணத்தையும் நடிகர் பாலாஜி முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் விடாத திமுகவினர் அவரை விமர்சிக்க, அவருக்கு ஆதரவாக அவரின் ரசிகர்களும், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களும் பதிலடி கொடுக்க பின்னூட்டமிட்டு வருகின்றனர்.
அதில் தமிழ் தேசியத்தை கொள்கையாக கொண்ட ஒருவர், தற்போது திமுக மாணவரணி தலைவராக இருக்கும் முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ராஜிவ்காந்தி, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பேசிய வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அந்த காணொளியில், “டாஸ்மாக் நடத்துவதன் மூலம் வருமானம் கிடைக்குமென்றால் விபச்சாரத்தை நடத்தலாமே…” என்று ராஜிவ்காந்தி பேசியது பதிவாகியுள்ளது.
டாஸ்மாக் நடத்துவதன் மூலம் வருமானம் கிடைக்குமென்றால் விபச்சாரத்தை நடத்தலாமே…
– திமுக மாணவரணி தலைவர் ராசீவ்காந்தி@rajiv_dmk #போதைப்பொருள்_திமுக #Archivepic.twitter.com/ePoYvHtDQU
— Dr. தீபக் (@nikaran_tn) March 26, 2023