திருச்செந்தூர் அருகே மணப்பாடு கடலில் தான் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆலிவ் ரிட்லி என்ற அரிய வகை ஆமைகள் இனபெருக்கம் செய்வதற்காக முட்டையிடுவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் இது போன்று ஆமைகள் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை முட்டையிட்டு குஞ்சியிடுவர், அதன் படி கடந்த ஜனவரி மாதம் முதல் மணப்பாடு கடலில் ஆமைகள் இடப்பட்ட முட்டைகளை வனத்துறை அதிகாரிகள் சேகரம் செய்து குஞ்சு பொரிப்பகம் அமைத்து பாதுகாத்து வந்த நிலையில், வனசரக அதிகாரிகள் மணப்பாடு பகுதியில் பொரிப்பகத்தில் பொரிக்க பட்ட ஆமை குஞ்சுகளை கடலில் விடும் பணிகளை வனத்துறை அதிகாரிகள் இன்று மேற்கொண்டனர்.
திருச்செந்தூர் மணப்பாடு வனசரகத்தின் தூத்துக்குடி மாவட்ட வனஅலுவலர் அபிஷேக் தோமர் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் வன சரக அலுவலர் கனிமொழி அரசு மற்றும் வனவர் செல்வராஜ் முன்னிலையில் வன சரக அதிகாரிகள் மணப்பாடு கடலில் பாதுகாக்கப்பட்டு பொரிக்கப்பட்ட 47 ஆமை குஞ்சுகளை பாதுகாப்பாக கடலில் விட்டனர்.
முன்னதாக இந்நிகழ்ச்சியின் போது வனத்துறை அதிகாரிகள் கடலாமை பாதுகாப்பு குறித்து மணப்பாட்டில் உள்ள மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இதில் திருச்செந்தூர் வனசரக அதிகாரிகள் கருணாகரன் ,சுரேஷ்குமார், மற்றும் வன காவலர்கள் செல்வராஜ் என பலரும் கலந்து கொண்டு தன்னார்வாளர்களுடன் இணைந்து கடலில் ஆமை குஞ்சுகளை விட்டனர், மேலும் இந்தாண்டு கடலாமைகளின் முட்டைகள் கடந்தாண்டை விட இம்முறை அதிகமாக உள்ளது என வன சரக அலுவலர் கனிமொழி அரசு தெரிவித்துள்ளார்.