சென்னை: தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, டெல்லி சென்றுவிட்டு கடந்த 15-ம் தேதி சென்னை திரும்பினார்.
அன்று இரவு அவருக்கு திடீரென நெஞ்சுவலி, மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். சிகிச்சைக்கு பிறகு, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், தீவிர சிகிச்சை பிரி வில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இந்த நிலையில், கடந்த 20-ம் தேதி செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு ஒமைக்ரான் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து, மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது.
தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறிய தாவது: ஈவிகேஎஸ் இளங்கோவன் தீவிர சிகிச்சை பிரிவில் உள் ளார். இதயம், நுரையீரல் செயல் திறனில் பாதிப்பு உள்ளது.
அதில் இருந்து அவர் இன்னும் பூரணமாக குணமடையவில்லை. அவற்றின் செயல்திறனை மீட்டெடுப்பதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வரு கின்றன. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றுவது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும். இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.