டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு விசாரணையை ஏப்.10க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் செயல்படுவதாக கூறி பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, கடந்த 2018 மே மாதம் 22ம் தேதி நடந்த போராட்டத்தில் 13 பேர் காவல்துறை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர்.
இதன் பின்னர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இந்நிலையில் வேதாந்தா நிறுவனம், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு காரணங்களுக்காக மீண்டும் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வருகிற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி ஒத்திவைத்தனர்.