தென்கொரிய நாட்டில் கட்டாய ராணுவ சேவையிலிருந்து விலக்கு பெற வேண்டுமெனில் 30 வயதுக்குள் இளைஞர்கள் குறைந்தபட்சம் 3 குழந்தைகளுக்கு தந்தையாகியிருக்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளது.
தென்கொரியாவில் 18 முதல் 28 வயதிற்குட்பட்டவர்கள் கண்டிப்பாக 18 முதல் 21 மாதங்கள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டுமென சட்டம் உள்ள நிலையில் விதி விலக்கினை அரசு அறிவித்துள்ளது.
உலகின் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதத்தை நாடு பதிவுசெய்துள்ள நிலையில் ஆரோக்கியமான குழந்தை பிறப்பு விகிதத்தை ஊக்குவிக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்தாலும், தற்போதைய பொருளாதார நெருக்கடி, திருமணத்தில் நாட்டமில்லாத இளம் தலைமுறையினருக்கு இது கடும் நெருக்கடியை அளிக்குமென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.