நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ராகுல் காந்தி பதவி பறிப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில்
இன்று ஒத்திவைப்பு நோட்டிஸ் அளித்துள்ளார்.
குஜராத் தொழிலதிபர்களான லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோர் தேசிய வங்கிகளில் பல கோடிக்கணக்கான பணத்தை வாங்கிவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி விட்டனர். இந்த இரண்டும் சம்பவமும் பிரதமர் மோடியின் பாஜக ஆட்சியின் போது நடைபெற்றது. இந்த சூழலில் கடந்த 2019ம் ஆண்டு கர்நாடகா தேர்தல் பரப்புரையின் போது பேசிய ராகுல் காந்தி, ‘‘மோடி என்ற பெயரை வைத்தவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கின்றனர்’’ என பேசினார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து குஜராத் முன்னாள் பாஜக அமைச்சர், ராகுல் காந்தி ஓபிசி சமூகத்தை இழிவுபடுத்தி விட்டதாக கூறி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற வழக்கில் கடந்த 23ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதன்படி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றால், அவரது எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்படும் என்பது விதி உள்ளது. அந்தவகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8 (3)ன் படி ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.
அதானி மற்றும் பிரதமர் மோடியின் நட்புறவு குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பியதாலே, அவருடைய பதவி பறிக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. அதேபோல் அவதூறு வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மற்றப்பட்டு, பாஜக சார்புடைய நீதிபதியை வைத்து தீர்ப்பை வழங்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
இந்தநிலையில் ராகுல் காந்திக்கு ஆதரவாக திருமாவளவன் மேலும் ஒரு நகர்வை செய்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘‘ராகுல்காந்தி பதவி பறிப்பு விவகாரம் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளேன். அதில், “ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
கர்ப்பிணிகள் பட்டை சேர்க்கலாமா, குழந்தைக்கு ஆபத்தா?
1860 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டத்தின் வரலாற்றில் கிரிமினல் அவதூறு வழக்கில் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இரண்டாவது வழக்கு இதுவாகும். ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் இருந்து நீக்கும் ஆளும் கட்சியின் எண்ணம் இதில் தெளிவாகத் தெரிகிறது.
எந்த அடிப்படையும் இல்லாமல் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது, கீழமை நீதிமன்றங்களில் அரசு தலையிடுவதை இது வெளிப்படுத்துகிறது. இந்த அவசர முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தை விவாதிக்க சபையின் மற்ற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளோம்.
அவைக்குள் வந்த சில நொடிகளில் அவையை ஒத்திவைத்தார் மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா. அடுத்த சில நிமிடங்களில் எதிர்க்கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டம் காந்தி சிலை முன்னர் நடந்தது. சோனியா காந்தி அவர்களும் பங்கேற்றார்.
பின்னர் அங்கிருந்து பேரணியாக விஜய் சதுக்கம் வரை கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு சென்றோம். மல்லிகார்ஜுன கார்கே மற்றும் டிஆர்பி பாலு உட்பட ஏராளமானோர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தோம். கௌதம் அதானியை
பாதுகாப்பதற்காகவே திசை திருப்புகிறார் மோடி என எனது பேட்டியில் குறிப்பிட்டேன்’’ என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.