அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் மர்ம நபர் ஒருவர் 1 வயது குழந்தையை தனியாக தவிக்கவிட்டு சென்ற மனதை கலங்கடிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
ஒரு வயது குழந்தை
குவாத்தமாலாவைச் சேர்ந்த ஒரு வயது குழந்தை, கொலராடோ ஆற்றில் இருந்து வெளிப்பட்ட கடத்தல்கார் ஒருவரால் கைவிடப்பட்டது.
அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் முழு வீடியோவும் பதிவாகியுள்ளது.
@USBPChief
அமெரிக்க எல்லை பாதுகாப்பு பொலிஸார் வெளியிட்ட வீடியோ
வீடியோவில், தண்ணீருக்குள் இருந்து திடீரென ஒரு கருப்பு உருவம் வெளியே வருகிறது. அடு ஒரு கடத்தல்காரர். அவர் எல்லையின் இரண்டு பிரிவுகளுக்கு இடையே ஒரு பாதையில் குழந்தையை தனியாக விட்டுவிட்டு, மீண்டும் தண்ணீரில் இரங்கி மெக்சிகோவிற்குள் நுழைந்து வேகமான அங்கிருந்து சென்றுவிடுகிறார்.
இரண்டு சுவர்களுக்கு நடுவே தனியாக விடப்பட்ட அந்த குழந்தை எழுந்து செய்வதரியாது சுற்றி நடக்கிறது. எந்த நேரத்திலும் தண்ணீரில் விழும் அபாயத்தில் இருந்தது.
அந்த நேரத்தில் ஒரு எல்லை ரோந்து முகவர் காரில் வேகமாக அந்த இடத்தை நெருங்கி குழந்தையை மீட்டார்.
A one-year-old Guatemalan child was abandoned along the Colorado River Monday afternoon by a smuggler who took him across the border and then left him to fend for himself along the water’s edge. Thanks to our agent’s quick response, tragedy was averted! pic.twitter.com/mY2K7t59VE
— Chief Raul Ortiz (@USBPChief) March 23, 2023
2 லட்சம் பேர் கடக்க முயற்சி
ஒவ்வொரு மாதமும் சுமார் 200,000 பேர் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவிற்கு எல்லையை கடக்க முயற்சிப்பதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரும்பாலானவர்கள் மத்திய மற்றும் தென் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள், அவர்கள் தங்கள் நாட்டில் வறுமை மற்றும் வன்முறையை மேற்கோள் காட்டி அமெரிக்காவில் தஞ்சம் கோருகின்றனர்.
அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவின்படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 58,000-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறார்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். 2023 நிதியாண்டு கடந்த ஆண்டு சாதனையை முறியடிக்கும் என்று கூறப்படுகிறது.