புதுடில்லி வருங்காலத்துக்கான பள்ளிகளை உருவாக்கும் வகையில், ‘பிஎம்ஸ்ரீ’ என்ற பெயரிலான பள்ளிகள் மேம்பாட்டு திட்டத்தில் பங்கேற்க தமிழகம் உட்பட ஏழு மாநில அரசுகள் முன்வரவில்லை.
நாடு முழுதும் உள்ள பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், பிஎம்ஸ்ரீ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இதன்படி, ௧௪ ஆயிரத்து ௫௦௦ பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு அனைத்து வசதிகளும் மேம்படுத்தப் படும்.
இது குறித்து மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளதாவது:
முதல்கட்டமாக நாடு முழுதும் உள்ள, ௨.௫௦ லட்சம் பள்ளிகளில், ௯,௦௦௦ பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. மத்திய, மாநில அரசுகள் நடத்தும் பள்ளிகளும் இதில் அடங்கும். விரைவில் இந்தப் பட்டியல் வெளியிடப்படும்.
அதே நேரத்தில் இந்த திட்டத்தில் சேருவதற்கு தமிழகம், புதுடில்லி, மேற்கு வங்கம், பீஹார், ஒடிசா, கேரளா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் முன்வரவில்லை. இது தொடர்பாக இந்த அரசுகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement