ஜெருசலேம்: இஸ்ரேல் அரசு நிர்வாகம் கொண்டு வந்துள்ள நீதித்துறை சீர்திருத்த சட்டத்தை நிறுத்தி வைக்குமாறு அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக் உத்தரவிட்டுள்ளார்.
இஸ்ரேல் அதிபராக ஐசக் ஹெர்சாக் உள்ளார். இந்நிலையில் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு தலைமையிலான அரசு புதிய நீதித்துறையில் சீர்திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு நாடு முழுதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. கூட்டணி கட்சி தலைவர்களும் அதிருப்தி வெளியிட்டனர்.
நிலைமை முற்றியதால் அதிபர் ஐசக் ஹெ ர்சாக் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதிய சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement