மகளிர் உரிமைத் தொகை: ஒரு கோடி பேருக்கு வழங்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை!

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக முதல்வர்

சட்டமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

பரிசோதனை முயற்சியில் சில நாடுகளில் குறிப்பிட்ட சில பிரிவினர்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு நல்ல வரவேற்பும் பலனும் கிடைத்துள்ளது. வறுமையை ஒழிக்க உதவி செய்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். அப்படியானால் இந்த திட்டத்தால் தமிழ்நாடு எவ்வளவு பலன் அடையும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

யார் யாருக்கு வழங்குவார்கள் என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். மாதம் ஆயிரம் ரூபாய் தங்கள் குடும்ப செலவில் பெரிய பலனளிக்கும் என நினைக்கும் அனைவருக்கும் இந்த திட்டம் கிடைக்கப் பெறும். அனைவருக்கும் வீடு என்றால் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கப்படும் என்பது தான் பொருள். அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்றால், வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதுதான் பொருள்.

அந்த வகையில் அனைத்து மகளிர் என்றால், 1000 ரூபாய் யாருக்கு அதிகம் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு இந்த திட்டம் வழங்கப்படும்.

நடைபாதை கடைகளை நடத்துவோர், மீனவ பெண்கள், சிறு கடைகளை நடத்துவோர், வீட்டு வேலை செய்வோர் என தங்கள் உடல் உழைப்பை செலுத்தும் ஒரு கோடி மகளிருக்கு இந்த திட்டம் வழங்கப்படும்.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.