புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் அரசு முறைப் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: குடியரசுத் தலைவர் முர்முமேற்கு வங்கத்தில் திங்கள்கிழமை (இன்று) முதல் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது, கொல்கத்தாவில் யூகோ வங்கியின் 80 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விழாவில்பங்கேற்கும் அவர், விஸ்வபாரதியின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க சாந்திநிகேதனுக் கும் செல்ல உள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள நேதாஜி பவனுக்கு திங்கள்கிழமை செல்லும் குடியரசுத் தலைவர் அங்கு சுபாஷ் சந்திரபோஸின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். அதன் பிறகு, பிற்பகலில்ஜேராசங்கோ தாகுர்பாரி-ரவீந்திரநாத் தாகூரின் இல்லத்திற்கு சென்றுஅவருக்கு அஞ்சலி செலுத்துகிறார். மாலையில், நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள வரவேற்பு நிகழ்ச்சியில்கலந்து கொள்ளவுள்ளார். நாளைமறுநாள் பேலூர் மடத்திற்கு வருகை தரவுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.