தமிழகத்தில் தலைமை செயலாளராக அரசு நிர்வாகத்தை கவனித்து வருபவர் வெ.இறையன்பு ஐஏஎஸ். இவரது நேர்மையான மற்றும் திறமையான செயல்பாடுகள் கருணாநிதி காலத்திலேயே பலரும் நன்கு அறிந்த விஷயம். சிறந்த பேச்சாளர், எழுத்தாளரும் கூட. அதனால் 2021ல் திமுக ஆட்சி அமைந்ததும் தட்டி தூக்கி வந்த முதன்மை நாற்காலியில் அமர வைத்துக் கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தலைமை செயலாளர் ரேஸ்இவரது பணி இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்த நிலையில் வரும் ஜூன் 16ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால் அடுத்த தலைமை செயலாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் அடுத்த நபரை தேர்வு செய்வதில் ஸ்டாலின் மும்முரம் காட்டி வருகிறார். ஏற்கனவே சிவதாஸ் மீனா, அதுல்யா மிஸ்ரா, விக்ரம் கபூர், ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகியோரின் பெயர்கள் தலைமை செயலாளரின் ரேஸில் இருப்பதாக நமது “சமயம் தமிழ்” இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
ஸ்ரீரங்கம் கோயிலில் யாகம்இந்த பட்டியலில் புதிய வரவாக இணைந்திருப்பவர் தான் பிரதீப் யாதவ் ஐஏஎஸ். இவர் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சமீபத்தில் யாகமும், சிறப்பு பூஜையும் செய்துள்ளார். இந்த விஷயத்தை சிலர் தலைமை செயலாளர் பதவிக்கான வியூகம் என முடிச்சு போட்டுள்ளனர். இது கோட்டை வட்டாரத்தில் புகைச்சலாக மாற முதல்வர் ஸ்டாலினின் சாய்ஸில் இடம்பிடிப்பாரா? இறையன்பு இடத்தை நிரம்புவாரா? போன்றவை மில்லியன் டாலர் கேள்விகளாக மாறியுள்ளன.
இறையன்பு டூ சிவதாஸ் மீனா; டெல்லி செய்யும் லாபி… ஸ்டாலின் பிளான் சரி வருமா?
யார் இந்த பிரதீப் யாதவ்?பிரதீப் யாதவ் ஐஏஎஸ் 1992ஆம் ஆண்டு தமிழ்நாடு பேட்சை சேர்ந்தவர். கடந்த அதிமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறையின் செயலாளராக பணியாற்றியுள்ளார். அந்த சமயத்தில் தான் 5, 8ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கல்வியாளர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.
வெடித்த சர்ச்சைஇந்நிலையில் கைத்தறி மற்றும் காதி துறையின் முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் மாற்றப்பட்டார். கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக தங்கமணி இருந்த போது, மின்சாரம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் நிர்வாக இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் உடனடியாக அந்த பதவியை ஏற்காமல் காலம் தாழ்த்தியது சர்ச்சையானது.
பதவியேற்பு ஒத்திவைப்புமின் வாரியத்திற்கு மின்சாரம் விநியோகம் செய்த தனியார் நிறுவனங்களுக்கு உரிய பணம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவியது. இந்த நேரத்தில் அந்த துறையின் நிர்வாக இயக்குநராக பதவியேற்றால் சிக்கலாகி விடுமோ? என்ற எண்ணத்தால் பதவியேற்பை ஒத்தி வைத்ததாக ஒரு பேச்சு அடிபட்டது.
நெடுஞ்சாலைத் துறை செயலாளர்கடந்த டிசம்பர் மாதம் 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அந்தஸ்து வழங்கி கூடுதல் தலைமை செயலாளராக பதவி உயர்வு அளித்து இறையன்பு உத்தரவு பிறப்பித்தார். அதில் ஒருவராக இடம்பிடித்தவர் பிரதீப் யாதவ். இதற்கிடையில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டின் மேலாண் இயக்குநராக இருந்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டு, தற்போது வரை அந்த பதவியில் பிரதீப் யாதவ் தொடர்ந்து வருகிறார்.