வீட்டிலேயே சுவையான மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று தெரியுமா?


மாங்காய் என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை மிகவும் பிடிக்கும். பொதுவாகவே நாங்கள் சாதத்துடன் ஊறுகாய் வைத்து சாப்பிடுவது வழக்கம். அதிலும் மாங்காய் ஊறுகாய் என்றால் தினமும் ஊறுகாய் சாப்பிட தோனும்.

கடைகளில் வாங்கப்படும் ஊறுகாயை தயாரிக்க பல இரசாயன சுவையூட்டிகள் சே்கப்படுகின்றன. இது சுவையானதாக இருந்தாலும் உடலிற்கு ஆரோக்கியத்தை தராது.

ஆகவே வீட்டில் இருந்தப் படியே எவ்வாறு சுவையான மாங்காய் ஊறுகாய் செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • மாங்காய் – 02

  • மிளகாய் தூள் – தேவையான அளவு
  • வெந்தயம் – 1 தேக்கரண்டி

  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

  • நல்லெண்ணெய்
  • கடுகு

  • பெருங்காயதூள்

  • உப்பு

வீட்டிலேயே சுவையான மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று தெரியுமா? | How To Make Delicious Mango Pickle At Home

செய்முறை

  • மாங்காய் ஊறுகாய் செய்வதற்கு முதலில் மாங்காய்களை நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் அதில் உப்பு சேர்த்து 6மணிநேரத்திற்கு ஈரப்பதம் இல்லாமல் காய வைக்க வேண்டும்.
  • வெந்தயத்தை வறுத்தெடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • அதனுடன் மிளகாய் தூள் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.  
  • பிறகு சூடான ஒரு பாத்திரத்தில் எண்ணெய், கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து எடுக்க வேண்டும்.
  • அதை ஊறவைத்த மாங்காய் துண்டுகளுடன் சேர்த்து 3நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். அதனை ஒரு துணியில் கட்டி வெயிலில் வைப்பது சிறந்தது.

குறிப்பு : மட்பாணைக் கொண்டு செய்தால் சுவையாகவும் 2வருடங்கள் வரையும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.   

வீட்டிலேயே சுவையான மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று தெரியுமா? | How To Make Delicious Mango Pickle At Home



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.