திருமலை: திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு பணத்தை வங்கிகளில் டிபாசிட் செய்ய, தேவஸ்தானத்துக்கு ரிசர்வ் வங்கி அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமலை திருப்பதியில் உள்ள வெங்கடாஜலதியை தரிசனம் செய்த பின் பின், பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். தேவஸ்தானம், இந்த காணிக்கைகளை சில்லரை, ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு பணம் என பிரித்து கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைக்கிறது.
வெளிநாடுகளில் காணிக்கையாக வந்த பணத்தை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தால் , உரிய வங்கி கணக்கில் டிபாசிட் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக வந்த ரூ.30 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் செலுத்திய பக்தர்களின் விவரத்தை தேவஸ்தானத்தால் கண்டுபிடிக்க முடியாததால் டெபாசிட் செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி மறுத்துள்ளது.
மேலும் வெளிநாட்டு பணத்தை டெபாசிட் செய்த பக்தர்களின் விவரங்களை வழங்காத காரணத்தினால் ரிசர்வ் வங்கி திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.3.29 கோடி அபராதம் விதித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement