சென்னை: ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க 31ஆம் தேதி தமிழக காங்கிரஸ் சார்பில் கூட்டம் நடத்தப்படுகிறது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் 31ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆலோசனை நடைபெறுவதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுப்பது பற்றி ஆலோசனை நடைபெற உள்ளது.
