மலையாள திரையுலகில் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் இன்னசென்ட். கேரளாவின் சாலக்குடி பகுதியின் முன்னாள் எம்பியாகவும் திகழ்ந்தவர் இவர். இந்நிலையில் நடிகர் இன்னசென்ட் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
மலையாளம் மட்டும் இல்லாமல் தமிழ், கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 750 படங்களுக்கும் மேல் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் இன்னசென்ட். நடிகராக மட்டுமில்லாமல் பாடகராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்த இவர் மலையாள நடிகர் சங்கங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
நடிகர் இன்னசன்ட் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாக வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து வந்தனர்.
Pathu Thala: திருமணத்திற்கு பிறகு கிளாமர் டான்ஸ்: சமந்தாவுக்கு டஃப் கொடுக்கும் சாயிஷா..!
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார் இன்னசென்ட். இவரது மரணம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் முதல் அவரின் உடல்நிலை மோசமடைந்து வந்த நிலையில் நுரையீரல் தொடர்பான நோய்களுடன் உறுப்புகள் செயலிழந்தது. இதனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இன்னசென்ட்.
இந்நிலையில் இதயநோய் காரணமாக அவர் மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவருக்கு வயது 75. நடிகர் இன்னசென்ட் மரணம் மலையாள திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இன்னசென்ட் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திருமணமாகி 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் அப்பாவான பக்ரு: தீயாய் பரவும் புகைப்படம்.!