எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். தென்காசி காட்டுப் பகுதியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகிவிட்டது.
ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த ரசிகர்கள் சிலர் தான் அந்த வீடியோவை எடுத்ததாக கூறப்படுகிறது. கசிந்த வீடியோவை பார்த்த தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தயவு செய்து யாரும் அந்த வீடியோவை ஷேர் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
மேலும் இது குறித்து அருண் மாதேஸ்வரனிடமும் புகார் தெரிவித்துள்ளனர். கேப்டன் மில்லர் படப்பிடிப்பு மே மாதம் நிறைவடையும். அந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடித்து வருகிறார்.
கேப்டன் மில்லர் வீடியோ கசிந்தது திருச்சிற்றம்பலம் பிரச்சனையை நினைவூட்டியிருக்கிறது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா, ப்ரியா பவானிசங்கர் உள்ளிட்டோர் நடித்த திருச்சிற்றம்பலம் படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி ரிலீஸாகி வெற்றி பெற்றது. அந்த படம் ரூ. 100 கோடி வசூல் செய்தது.
திருச்சிற்றம்பலம் படப்பிடிப்பு துவங்கிய நாளில் இருந்தே ஸ்பாட்டில் இருந்து புகைப்படங்கள், வீடியோக்கள் கசிந்து வந்தது. ப்ரோ மொத்த படமும் கசிந்துவிடாமல் பார்த்துக்கோங்க என மித்ரன் ஜவஹரிடம் கோரிக்கை விடுத்தார்கள் தனுஷ் ரசிகர்கள்.
திருச்சிற்றம்பலத்தை அடுத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்தார் தனுஷ். ஆனால் அந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்து எதுவும் கசியவில்லை. இந்நிலையில் மீண்டும் தனுஷுக்கு அதே கசிவு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.
Aishwarya Rajinikanth: ஏமாத்திட்டீங்க ஐஸ்வர்யா: லால் சலாம் ஹீரோ விஷ்ணு விஷால்
முன்னதாக கேப்டன் மில்லர் படப்பிடிப்பு தளத்தில் தனுஷுக்கும், அருண் மாதேஸ்வரனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அருண் மாதேஸ்வரன், தனுஷுக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை என படக்குழு தெரிவித்தது.
இந்நிலையில் வீடியோ கசிவு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. படக்குழுவை சேர்ந்த யாராவது வீடியோ எடுத்து வெளியிட்டிருந்தால் அவர்களை கண்டிக்கலாம். ஆனால் ரசிகர்கள் வீடியோ எடுத்திருப்பதால் தனுஷ் தான் அவர்களை ஒழுங்காக இருக்குமாறு சொல்ல வேண்டும் என பேச்சு கிளம்பியிருக்கிறது.
கேப்டன் மில்லர் பிரச்சனைக்கு இடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவகாரம் பற்றியும் பேசப்படுகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி என்கிற பணிப்பெண் லாக்கரில் இருந்த நகைகளை திருடியிருக்கிறார்.
Aishwarya Rajinikanth: சொன்னது 60 பவுன், கிடைத்தது 100 பவுன்: ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் விசாரிக்கும் போலீஸ்?
நான்கு ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை திருடி ரூ. 1 கோடிக்கு வீடு வாங்கியிருக்கிறார். தன் வீட்டு லாக்கரில் இருந்து 60 பவுன் நகைகள் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ஐஸ்வர்யா. ஆனால் ஈஸ்வரியிடம் இருந்து 100 பவுனுக்கு மேல் மீட்கப்பட்டுள்ளது.
அதனால் இது தொடர்பாக ஐஸ்வர்யாவிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் படப்பிடிப்பில் இருக்கிறார். பல ஆண்டுகள் கழித்து அவர் இயக்கும் படம் லால் சலாம் என்பது குறிப்பிடத்தக்கது.