எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
தமிழ் சினிமாவில் இவ்வருடத்தில் மிகப்பிரமாண்டமான படங்கள் பல உருவாகி வருகின்றன. அதில் மிகமுக்கியமான ஒரு படம் தான் ஜெயிலர். ரஜினி மற்றும் நெல்சனின் கூட்டணியில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகின்றார். கடந்தாண்டு இப்படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
கடந்த பத்து ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் ரஜினியின் நடிப்பில் வெளியான படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றியை பெறவில்லை. குறிப்பாக கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து தோல்வியடைந்தது.
AK62: AK62 படத்தை பற்றிய கேள்வி..காட்டமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்..!
இதையடுத்து ரஜினியின் மீதும் பல விமர்சனங்கள் எழுந்தது. அந்த விமர்சனங்களுக்கெல்லாம் ஜெயிலர் படத்தின் வெற்றியின் மூலம் பதிலடி கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறார் ரஜினி. இதன் காரணமாக ஜெயிலர் படத்தில் ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் இப்படத்திற்கு அந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது என்பது உண்மைதான். ஆனால் இப்படத்தின் போஸ்டர் மற்றும் கிலிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களின் வரவேற்பை பெற படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் மோகன்லால், ஷிவ்ராஜ்குமார் என தென்னிந்திய சூப்பர்ஸ்டார்கள் இப்படத்தில் இடம்பெற்றதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்தது.
இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக ரஜினி கொச்சின் சென்று திரும்பியுள்ளார். அங்கு ஒரே ஒரு நாள் தான் படப்பிடிப்பு நடந்துள்ளது, அதற்காக ரஜினி சென்னையிலிருந்து கொச்சின் பறந்து சென்றுள்ளார்.
இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கடலூர் உட்பட பல ஊர்களில் லைவ் லொகேஷனில் படமாக்கப்பட்டுள்ளது. பொதுவாக உச்ச நட்சத்திரங்களின் படங்கள் லைவ் லொகேஷனில் படமாக்கப்படுவது என்பது கடினமான ஒன்றாகும். ரசிகர்கள் மற்றும் அனுமதி உள்ளிட்ட பல விஷயங்கள் லைவ் லொகேஷனில் படமாக்கும் போது தடங்களாக இருக்கும்.
ஆனால் சூப்பர்ஸ்டாரின் ஜெயிலர் திரைப்படம் பல ஊர்களில் லைவ் லொகேஷனில் படமாக்கப்பட்டுள்ளதாம். ஏனென்றால் அப்போது தான் படம் எதார்த்தமாக இருக்கும் என படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளார்களாம். பல ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி பல லைவ் லொகேஷனில் நடித்த படம் ஜெயிலர் தானாம்.
இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படத்தை கிட்டத்தட்ட ஒரே செட்டில் எடுத்துவிட்டார்கள் என ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது. என்னதான் அக்கதைக்கு ஒரே லொகேஷனில் படமாக்கப்பட்டது தான் சரியாக இருந்தாலும் அது சலிப்புத்தட்டும் விதமாக இருந்ததாக பலர் கூறி வந்தனர்.
எனவே இம்முறை ஜெயிலர் திரைப்படத்தை பல லைவ் லொகேஷனில் எடுத்து அசத்தி வருகின்றார் நெல்சன்.இதையடுத்து இப்படம் இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.