அதிமுகவில் அதிகாரமிக்க ஒற்றை நாற்காலி
கையில் தான் உள்ளது எனப் பேசப்பட்டாலும்,
அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. தற்போதைய சூழலில் பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என பெரும்பான்மை ஆதரவு எடப்பாடி தரப்பிற்கு இருக்கிறது.
அதிமுக சட்டப் போராட்டம்
இந்த விவகாரத்தில் ஒரு தீர்ப்பு காண நீண்ட சட்டப் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை 11 பொதுக்குழுவில் தொடங்கி அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வரை பலகட்டங்களாக மோதல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அதிமுக – பாஜக கூட்டணி விஷயம் வேறு உரசலை ஏற்படுத்தி வருகிறது. கடைசியாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி, அதிமுக பொதுக்குழு செல்லும்.
பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கு
ஆனால் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி கீழமை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாக உத்தரவிட்டது. இந்த ஒரு பாயிண்டை பிடித்து கொண்ட ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
பொதுச் செயலாளர் தேர்தல்
இதற்கிடையில் பொதுச் செயலாளர் தேர்தலை அறிவித்து அதிகாரமிக்க நாற்காலியை பிடிக்க எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டினார். அதற்கு முட்டுக்கட்டை போட ஓடிவந்தது ஓபிஎஸ் தரப்பு. உடனே வேட்புமனு தாக்கல், போட்டியின்றி தேர்வு, பொதுச் செயலாளராக அறிவிப்பு என எடப்பாடி தரப்பு வேகம் காட்டியது. ஆனால் ஓபிஎஸ் முன்னெடுத்த சட்டப் போராட்டத்தால் தேர்தல் நடைமுறைகளை தொடரலாம்.
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆனால் தேர்தல் முடிவுகளை அறிவிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் தெலுங்கு வருட பிறப்பிற்கு அரசு விடுமுறை (மார்ச் 22) என்பதையும் தள்ளி வைத்து விட்டு விசாரிக்க உயர் நீதிமன்றம் முன்வந்தது. அன்றைய தினம் இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று (மார்ச் 28) காலை 10.30 மணிக்கு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி டி.குமரேஷ் பாபு உத்தரவிட்டார்.
ஓபிஎஸ் கணிப்பு
அந்த நாளும் வந்துவிட்டது. இன்னும் சில மணி நேரங்களில் தீர்ப்பு வரவிருக்கிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரண்டு தரப்பினரின் முகாமும் மில்லியன் டாலர் வெயிட்டிங்கில் காத்திருக்கிறது. இன்று தீர்ப்பு வழங்கப்படுவதை ஒட்டி எடப்பாடி, ஓபிஎஸ் இருவரும் சொந்த ஊரில் இருந்து சென்னை புறப்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை வந்திறங்கிய ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு,
”தீர்ப்பு உங்கள் கையில் தானே இருக்கிறது”
எனக் கூறிவிட்டு சென்றார். அதாவது மக்களின் தீர்ப்பே இறுதியான முடிவு என்பதை உணர்ந்து காத்திருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மறுபுறம் எடப்பாடியோ மிகுந்த நம்பிக்கையோடு காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.